புதுடெல்லி: இந்தியா மற்றும் நான்கு ஐரோப்பிய நாடுகள் மார்ச் 10ஆம் தேதி அன்று பொருளியல் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன.
அதன் மூலம் வர்த்தகம், முதலீடு ஆகியவை பெருகும் என்று தெரிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஒப்பந்தம் கையெழுத்தானது.
புதிய ஒப்பந்தம் மூலம் சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, லீச்டென்ஸ்டைன் ஆகிய நாடுகள் இணைந்து 133 பில்லியன் வெள்ளி முதலீடு செய்யவுள்ளன.
இந்த முதலீடு 15 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவிற்குள் வரும் என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

