மைசூரு: மின்வாரியத்தில் உயரதிகாரியாகப் பணிபுரிந்து வருகிறார் உமா சங்கரி. இவருடைய மாமனார் பத்மநாப சுவர்ணா (87 வயது). தடியின் உதவியுடன் நடப்பவர்.
இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த மாமனாரை, அவரது தடியைப் பிடுங்கி கடுமையாகத் தாக்கியதோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் சங்கரி.
வலிபொறுக்காமல் அலறித் துடித்த அந்த முதியவர், அடிக்காதே என்று கெஞ்சியும் அவரை விடாமல் தடியால் அடித்து கீழே தள்ளி விட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து முதியவரின் மகள் அளித்த புகாரின் அடிப்படையில், அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் சங்கரியைக் கைது செய்தனர். அவர் இப்போது 14 நாள்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.
இதுபற்றி கண்காணிப்புக் கருவியில் பதிவான காணொளிக் காட்சிகள் வெளியாகி உள்ளன. கடுமையாகக் காயமடைந்த முதியவர் பத்மநாப சுவர்ணாவை மீட்ட காவல்துறையினர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

