தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மைசூரு மகாராஜாவை வேட்பாளராக களமிறக்கும் பாஜக; அதிர்ச்சியில் முதல்வர் சித்தராமையா

1 mins read
76e7968e-d69f-40da-9cfe-2463a701ffc3
மைசூரு மகாராஜாவான யதுவீர் கிருஷ்ண தத்தா சாமராஜ வாடியார். - படம்: ஊடகம்
multi-img1 of 2

மைசூரு: கர்நாடக மாநிலத்தின் முதல்வர் சித்தராமையாவுக்கு அதிர்ச்சியூட்டும் விதத்தில், மைசூரு சமஸ்தானத்தின் தற்போதைய மகாராஜாவான யதுவீர் கிருஷ்ண தத்தா சாமராஜ வாடியாரை மைசூரு மக்களவைத் தொகுதி வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது.

மைசூரு அரசக் குடும்பத்தினரிடையே அரசியல் என்பது புதிதல்ல. ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜா வாடியார் 4 முறை காங்கிரஸ் சார்பில் நின்று வென்றிருக்கிறார். பாஜக சார்பில் ஒரு முறை நின்று தோல்வியும் அடைந்திருக்கிறார்.

இப்போது அவரது தத்துப்பிள்ளையான தற்போதைய மைசூரு மகாராஜாவான யதுவீர் கிருஷ்ண தத்தா சாமராஜ வாடியார் பாஜக வேட்பாளராகி உள்ளார்.

தலைநகர் மைசூருவில் பாஜகவின் நடப்பு எம்பியாக இருமுறை இருந்த பிரதாப் சிம்ஹாவுக்கு இம்முறை சீட் மறுக்கப்பட்டு, யதுவீர் கிருஷ்ண தத்தாவை வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக தலைமை.

இதற்காக பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நேரடியாக மைசூரு மகாராஜாவை தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

மைசூரு நகரில் கல்வி, விவசாயம், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றில் குறிப்பிடத்தக்க சேவைகளைச் செய்து வரும் மைசூரு ராஜவம்சத்தினர் மீது அப்பகுதி மக்களுக்கு விசுவாசம் உண்டு.

மைசூரு மகாராஜாவை வேட்பாளராக்கியதன் மூலம் தற்போது அந்த அபிமானத்தை பாஜக அறுவடை செய்ய காத்திருக்கிறது.

குறிப்புச் சொற்கள்