ஆபாசக் காட்சி கொண்ட படங்கள்: 18 ஓடிடி தளங்கள் முடக்கம்

ஆபாசக் காட்சி கொண்ட படங்கள்: 18 ஓடிடி தளங்கள் முடக்கம்

1 mins read
f6f5deda-4ff9-4fbb-b950-b6ea4c6e0632
படம் - பிக்சாபே

புதுடெல்லி: ஆபாசக் காட்சிகள் அடங்கிய படங்களை எச்சரிக்கையை மீறி தொடர்ந்து ஒளிபரப்பி வந்த 18 ஓடிடி தளங்கள், 19 இணையத்தளங்கள், 10 செயலிகள், 57 சமூக ஊடகக் கணக்குகளை மத்திய தகவல், ஒளிபரப்பு அமைச்சு முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

டிரீம்ஸ் ஃபிலிம்ஸ், எக்ஸ் பிரைம், பிரைம் பிளே, நியூபிளிக்ஸ், ஹண்டர்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்த ஓடிடி தளங்கள், இணையத்தளங்களின் முகநூல், இன்ஸ்டகிராம், எக்ஸ், யூடியூப் பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளன.

முடக்கப்பட்ட சமூக ஊடகப் பக்கங்களை மட்டும் 32 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்