புதுடெல்லி: இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை, சட்டமன்றத் தேர்தல்களை நடத்தும் வகையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இது தொடர்பாக ஆய்வு செய்த முன்னாள் அதிபர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, 18 ஆயிரத்து 626 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் மத்திய அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை வழங்கி உள்ளது.
முதற்கட்டமாக, நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்றும் அடுத்த 100 நாள்களுக்குள் நாடு முழுவதும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்கலாம் என்றும் அந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலுக்கு அதிக மனிதவளம், உபகரணங்கள் தேவைப்படுவதால் 100 நாள்கள் அவகாசம் தேவைப்படும் என்றும் விளக்கம் தந்துள்ளது.