தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலை ஒரேகட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. கேரளா, ஆந்திரா, குஜராத், அரியானா, தெலுங்கானா, புதுச்சேரியிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.
உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கத்தில் 6 முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. 48 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் 4 முதல் 5 கட்டங்களாக தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலை ஏப்ரல் 16 முதல் மே 26 வரை 7 கட்டங்களாக நடத்தவும் மே மாத இறுதியில் வாக்கு எண்ணிக்கை நடத்தவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

