இந்திய நாடாளுமன்றத் தேர்தல் தேதி நாளை வெளியாகிறது

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் தேதி நாளை வெளியாகிறது

1 mins read
ca6b0143-c229-419f-a4ca-cd5b4589d1a8
ஆந்திரா உள்ளிட்ட நான்கு மாநில சட்டப் பேரவைத் தேதிகளும் சனிக்கிழமை வெளியிடப்பட உள்ளன. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றத் தேர்தல் தேதி நாளை சனிக்கிழமை (மார்ச் 16) பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்பட இருப்பதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் தேதியும் அப்போது அறிவிக்கப்பட உள்ளது.

இருப்பினும், ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

டெல்லியில் தேர்தல் ஆணைய அலுவலகம் உள்ள விஞ்ஞான் பவனில் பிற்பகலில் நடைபெறும் செய்தியாளர் கூட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும் தேதிகளை அறிவிப்பார்.

இரு தேர்தல் ஆணையர்களும் அப்போது அங்கு இருப்பர். ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சந்து என்னும் அந்த இருவரும் வெள்ளிக்கிழமை காலை தேர்தல் ஆணையர்களாகப் பதவி ஏற்றனர்.

தேர்தல் ஆணையராக இருந்த அருண் கோயல் கடந்த வாரம் பதவி விலகினார். மற்றோர் ஆணையர் அனுப் சந்தி பாண்டே ஓய்வுபெற்றுவிட்டார். எனவே அவ்விரு பதவிகளிலும் புதியவர்கள் நியமிக்கப்பட்டனர்.

தேர்தல் தேதிகளை அறிவிக்கும் நிகழ்ச்சி இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சமூக ஊடகத் தளங்களில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தேதி அந்த ஆண்டு மார்ச் 10ஆம் தேதி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்