மம்தா வீடு திரும்பினார்

மம்தா வீடு திரும்பினார்

1 mins read
fa2067de-2e1c-4e89-a5c3-d27b273804b4
மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது. - படம்: இந்திய ஊடகம்

கோல்கத்தா: மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நெற்றியில் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்பிவிட்டார். தொடர் மருத்துவக் கண்காணிப்பில் மம்தா இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோல்கத்தாவில் உள்ள காளிகாட் வீட்டில் வியாழக்கிழமை கீழே விழுந்ததில் அவருக்குக் காயம் ஏற்பட்டது.

69 வயதான அவர், கோல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்