‘கூகல் சொல்வது தவறு’: சுற்றுப்பயணிகளை எச்சரிக்கும் உள்ளூர்வாசிகள்

‘கூகல் சொல்வது தவறு’: சுற்றுப்பயணிகளை எச்சரிக்கும் உள்ளூர்வாசிகள்

1 mins read
f450e41d-3593-486c-9f06-4cf34eda17d6
அறிவிப்புப்பலகையைக் காட்டும் படம், இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. - படம்: எக்ஸ் தளம்

பயணத்தின்போது சரியான வழியைக் காட்ட, பலரும் நம்பியிருக்கும் ஒன்றுதான் ‘கூகல் மேப்ஸ்’.

ஆனால், அது எந்நேரமும் துல்லியமாக வழிகாட்டுவதில்லை என்று அனுபவரீதியாகச் சிலர் உணர்கின்றனர்.

அண்மையில், சமூக ஊடகங்களில் பரவலாக வலம்வரும் ஒரு படத்தில் உள்ளூர்வாசிகள் தாங்களே பிரச்சினையைத் தீர்த்துவிடக் களமிறங்கியிருந்தனர்.

அவர்களே ஓர் அறிவிப்புப்பலகையை நட்டுவைத்து, கூகல் காட்டும் வழி தவறு என்று அதில் எச்சரித்திருந்தனர்.

‘கூகல் சொல்வது தவறு. இந்தச் சாலை கிளப் மகிந்திராவுக்குக் போகாது’ என்று அந்தப் பலகையில் எழுதப்பட்டிருந்தது.

தவறான தகவலால் சுற்றுப்பயணிகள் பலர் அந்தச் சாலைக்கு வந்திருக்கலாம் என்றும் இதனால் உள்ளூர்வாசிகளிடம் அவர்கள் வழி கேட்டு தவித்திருக்கலாம் என்றும் இந்தப் படத்தைக் காண்போர் நம்புகின்றனர்.

அதனால், இனி சுற்றுப்பயணிகளின் கேள்விக்குப் பதிலளிக்கத் தயாராக இல்லாத அந்த உள்ளூர்வாசிகள், அறிவிப்புப்பலகையை வைத்துவிட்டதாகத் தோன்றுகிறது.

குறிப்புச் சொற்கள்