ஜம்மு-காஷ்மீரில் இயங்கியஐந்து அமைப்புகளுக்குத் தடை

ஜம்மு-காஷ்மீரில் இயங்கியஐந்து அமைப்புகளுக்குத் தடை

1 mins read
ff7b0498-7ed0-4ead-a281-78a1f6d27c3b
நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா எச்சரித்துள்ளார். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

ஜம்மு-காஷ்மீரில் இயங்கி வந்த ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி (தீவிரவாத குற்றச்செயல் நடவடிக்கை குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் யாசின் மாலிக் தலைமையில் இயங்கி வந்த அமைப்பு), காஷ்மீர் மக்கள் விடுதலை லீக் மற்றும் இந்த அமைப்பில் இருந்து பிரிந்து செயல்படும் நான்கு அமைப்புகள் ஆகியவற்றை இந்திய அரசு தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு சவால் விடும் வகையில் செயல்படுவது கண்டறியப்பட்டால், சட்டபூர்வ கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்,” என்று எச்சரித்துள்ளார்.

‘ஜம்மு-காஷ்மீர் மக்கள் லீக்’ (முக்தார் அகமது வாஜா), ‘ஜம்மு-காஷ்மீர் மக்கள் லீக்’ (பாஷீர் அகமது டோட்டா), ‘ஜம்மு-காஷ்மீர் மக்கள் லீக்’ (குலாம் முகமது கான்), யாகூப் ஷேக் தலைமையிலான ‘ஜம்மு-காஷ்மீர் மக்கள் லீக்’ (அஜிஸ் ஷேக்) ஆகிய அமைப்புகளுக்கு தனித்தனியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முகமது யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி சட்டவிரோதமான அமைப்பு என்பதால் மேலும் ஐந்து வருடத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்