தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்திய வரலாற்றில் ஆக நீண்டகாலம் நடைபெறும் இரண்டாவது தேர்தல்

1 mins read
74d97068-ed7b-400b-b72b-a61cc04beb8d
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இந்தியாவில் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை நடைபெறுகிறது. - படம்: ஏஎஃப்பி

ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்க உள்ள இந்திய நாடாளுமன்றத் தேர்தல் ஆக நீண்டகாலம் நடக்கக்கூடிய இரண்டாவது தேர்தல் என்று இந்திய வரலாற்றில் பதிவாகி உள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் 1951-52ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் காலம் நான்கு மாதங்களுக்கு நீடித்தது.

அதன் பின்னர், அது சுருக்கப்பட்டு நாடு முழுவதும் ஒருசில நாள்களில் வாக்குப்பதிவை முடிக்கும் வகையில் தேர்தல் நடைபெற்று வந்தது.

குறிப்பாக, 1980ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் வெறும் நான்கு நாள்களிலேயே முடிந்துவிட்டது. இந்திய வரலாற்றில் ஆகக் குறைந்த தேர்தல் காலம் அது.

சனிக்கிழமை அறிவிக்கப்பட்டபடி, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.

மொத்தம் 44 நாள்களுக்கு நீடிப்பதால் 1951-52ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆக நீண்ட தேர்தல் காலமாக இது இடம்பெற்று உள்ளது.

மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் 83 நாள்கள் நீடிப்பதும் ஒரு வரலாற்றுச் சம்பவம் ஆகும்.

பிப்ரவரி 16 (சனிக்கிழமை) தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடப்புக்கு வந்துவிட்டன. ஜூன் 6ஆம் தேதி வரை அவை அமலில் இருக்கும்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், இயந்திர உதவி இன்றி வாக்குச்சீட்டு முறை நடப்பில் இருந்தபோது இதைவிடக் குறைவான நாள்கள் தேர்தல்கள் நடைபெற்றன.

குறிப்புச் சொற்கள்