திருமண நாளில் ஓடும் கார் மீது சிலை போல் நின்று சாகசம் செய்த மணமகன்; கார் பறிமுதல்

1 mins read
5b6cf66c-7f40-4404-b165-acd606549c14
திருமண நாளில் ஓடும் கார் மீது சிலை போல் நின்று சாகசம் செய்த மணமகன் அங்கித். - படம்: ஊடகம்

லக்னோ: திருமண நாளில் ஓடும் கார் மீது சிலை போல் நின்று சாகசம் செய்த மணமகன் மீது உத்தரப்பிரதேச மாநிலக் காவலர்கள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போக்குவரத்து காவலர்களும் விசாரணை நடத்திய நிலையில், மணமகன் அங்கித்தின் காரைப் பறிமுதல் செய்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், சகாரன்பூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காரின் மீது சிலை போல் நின்றபடி மாப்பிள்ளை அலங்காரத்துடன் இருந்த ஒருவர் சாகசப் பயணம் செய்த காணொளி சமூக ஊடகங்களில் பரவியது.

இதனைப் பார்த்த காவலர்கள் விசாரணையில் இறங்கியபோது, காரில் மணமகன் அலங்காரத்தில் நின்றவர் மீரட் அருகே உள்ள குசாவலி கிராமத்தைச் சேர்ந்த அங்கித் என்பது தெரியவந்தது.

மணமகள் தனது வீரத்தைக் கண்டு வியந்து பாராட்ட வேண்டும் என்பதற்காக இப்படிக் கார் மீது துணிந்து நின்றுகொண்டு வந்ததாகக் கூறினார்.

சகாரன்பூரில் உள்ள பைலா கிராமத்தில் இருந்து மணமகன், மணமகளின் வீட்டிற்குச் சென்றபோது ஆளில்லா வானூர்தி மூலம் இந்தக் காணொளியை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்