கங்கை நதியில் காந்தத்தை வீசி பணம் சேகரிக்கும் ஆடவர்

கங்கை நதியில் காந்தத்தை வீசி பணம் சேகரிக்கும் ஆடவர்

1 mins read
cca7657a-9aa2-4955-8ec3-8c761ec81dad
கங்கை நதியில் கிடக்கும் காசுகளைச் சேகரிக்கும் ஆடவர். - படம்: ஊடகம்

லக்னோ: கங்கை நதியின் நடுப்பகுதிக்கு படகில் சென்று காந்தத்தை வலையில் கட்டி வீசி ஆடவர் ஒருவர் நாணயங்களைச் சேகரித்து வருகிறார். அவரது பெயர் விவரம் குறிப்பிடப்படவில்லை.

இக்காணொளி இணையத்தில் அதிகமானோரின் பார்வைகளைக் குவித்து வருகிறது.

இதனைப் பார்க்கும் வலைத்தளவாசிகள் பலரும் இப்படியும்கூட பணம் சம்பாதிக்க முடியுமா என்ற வினாக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

கங்கை நதியில் புனித நீராடச் செல்லும் பொதுமக்கள் பலரும் நதியை வணங்கி, அதில் புனிதப் பொருள்களையும் நாணயங்களையும் வீசிவிட்டுச் செல்கின்றனர்.

இதுபோல் வீசப்படும் நாணயங்களைச் சேகரித்து வரும் ஆடவர், இந்த நாணயங்கள் மூலம் தங்களது குடும்பத்தினரின் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள முடிவதாகக் கூறுகிறார்.

சில நேரங்களில் நாணயங்கள் சேகரிப்பின்போது தங்கம், வெள்ளி நகைகளும்கூட கிடைத்துள்ளதாக அவர் கூறுகிறார்.

குறிப்புச் சொற்கள்