போலி என்கவுண்டர்: மும்பை காவல்துறை அதிகாரிக்கு ஆயுள் தண்டனை

போலி என்கவுண்டர்: மும்பை காவல்துறை அதிகாரிக்கு ஆயுள் தண்டனை

1 mins read
39e40b9b-c49a-4a56-9f61-71a46ab1097b
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பிரதீப் சர்மா. - படம்: இந்திய ஊடகம்

மும்பை: போலி என்கவுண்டரை நடத்தி குண்டர் கும்பலைச் சேர்ந்தவர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவரைச் சுட்டுக் கொன்றதற்காக மும்பை காவல்துறை அதிகாரி பிரதீப் சர்மாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இக்குற்றம் தொடர்பாக தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதீப் சர்மா போலி என்கவுண்டர் நடத்தியதை துப்பாக்கி தொடர்பான தடயவியல் நிபுணர் உறுதி செய்தார்.

2006ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதியன்று சோட்டா ராஜனின் கும்பலைச் சேர்ந்தவர் எனச் சந்தேகிக்கப்படும் 33 வயது ராம்நாராயன் குப்தாவையும் அவரது நண்பரான அனில் பேடாவையும் சர்மா தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் குழு கடத்திச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

ராம்நாராயனை அவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவரது உடலில் ஐந்து தோட்டாக்கள் பாய்ந்தன.

இதுதொடர்பாக 22 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது.

இந்நிலையில், 12 காவல்துறை அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் நிலைநிறுத்தியுள்ளது.

குற்றச்சாட்டை எதிர்நோக்கிய பொது மக்களில் ஆறு பேரை அது விடுவித்தது.

குறிப்புச் சொற்கள்