பாஜக முதல் பட்டியல்: தென்சென்னையில்தமிழிசை சவுந்தரராஜன் போட்டி

பாஜக முதல் பட்டியல்: தென்சென்னையில்தமிழிசை சவுந்தரராஜன் போட்டி

1 mins read
fb7c4a3a-ac5a-4b56-bb31-1894b04f1b91
தென் சென்னையில் முன்னாள் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை பாஜக களமிறக்கியிருக்கிறது. - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

சென்னை: இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார்

தென்சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னையில் வினோத் பி செல்வம், கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடியில் நயினார் நாகேந்திரன், நீலகிரியில் எல்.முருகன் போட்டியிடுகின்றனர்.

அத்துடன், கிருஷ்ணகிரியில் நரசிம்மன், வேலூரில் ஏ.சி.சண்முகம், பெரம்பலூரில் பாரிவேந்தர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்