நிதி நெருக்கடி: கேரள நோயாளிகளுக்கு ஆபத்து

நிதி நெருக்கடி: கேரள நோயாளிகளுக்கு ஆபத்து

1 mins read
48c2df82-4a60-4860-8f4a-f6392f1de8e2
பாக்கித் தொகையைத் தராவிட்டால் அறுவை சிகிச்சைக்கான உபகரணங்களை நிறுத்தப்போவதாக விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர். - படம்: இந்திய ஊடகம்

திருவனந்தபுரம்: கேரள மாநில அரசு கடந்த சில மாதங்களாக கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.

இந்த நிதி நெருக்கடி மருத்துவத் துறையையும் பாதித்துள்ளதாகத் தெரிகிறது. கேரள மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் தனியார் நிறுவனங்களிடமிருந்து பெறப்படுகின்றன. அதில் ஏராளமான வினியோகஸ்தர்கள் ஈடுபடுகின்றனர்.

ஆனால், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் விநியோக்கப்பட்டதற்கான பெருந்தொகையை மாநில அரசு பல மாதங்களாக வழங்கவில்லை.

இதனால் அறுவை சிகிச்சை உபகரணங்கள் வழங்குவதை ஏப்ரல் மாதம் முதல் நிறுத்த விநியோகஸ்தர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. மார்ச் 31ஆம் தேதிக்குள் பாக்கித் தொகையைத் தராவிட்டால் உபகரணங்கள் விநியோகம் நிறுத்தப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது. குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை உபகரணங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை உள்ளது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்