ஆந்திர தேர்தல் களத்தில் 6 முன்னாள் முதலமைச்சர்களின் மகன்கள்

ஆந்திர தேர்தல் களத்தில் 6 முன்னாள் முதலமைச்சர்களின் மகன்கள்

1 mins read
7ec21d42-d628-44c4-a650-94516bafa2a6
ஜெகன் மோகன் ரெட்டி, பாலகிருஷ்ணா. - படங்கள்: இந்திய ஊடகம்

திருப்பதி: ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் 6 முன்னாள் முதலமைச்சர்களின் மகன்கள் போட்டியிடுகின்றனர்

முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் மகனும் தற்போதைய முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டி, புலிவெந்துலா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

முன்னாள் முதலமைச்சரும் தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ், மங்களாகிரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

முன்னாள் முதலமைச்சர் என்.டி. ராமராவின் மகன் நடிகர் பாலகிருஷ்ணா ஹிந்துபூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

முன்னாள் முதலமைச்சர் பாஸ்கரராவின் மகன் மனோகர், தெனாலி தொகுதியில் களமிறங்கி உள்ளார்.

வெங்கடகிரி தொகுதியில், முன்னாள் முதலமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மகன் ராம்குமார் ரெட்டி போட்டியிடுகிறார்.

தோனே தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் விஜய பாஸ்கர் ரெட்டியின் மகன் சூர்ய பிரகாஷ் ரெட்டி போட்டியிடுகிறார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்