தெலுங்கானாவுக்கு தண்ணீர் தருவோம்: கர்நாடகா அறிவிப்பு

1 mins read
69055c6a-2329-4790-bfcb-4fe6375872f1
கிருஷ்ணா நதியில் போதுமான தண்ணீர் இருப்பு உள்ளதால் அதிலிருந்து தெலுங்கானாவுக்குத் தண்ணீர் திறந்துவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. - படம்: இந்திய ஊடகம்

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் மற்றும் செகந்தராபாத் நகரங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

அந்த நகரங் களின் குடிநீர்த் தேவைக்காக அவசரமாக தண்ணீர் திறந்து விடுவோம் என கர்நாடகா நீர்ப்பாசனச் செயலாளர் உறுதியளித்து உள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “பெங்களூரில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரியில் தற்போது தண்ணீர் திறந்துவிட முடியாத சூழ்நிலை உள்ளது. ஆனால் கிருஷ்ணா நதியில் தண்ணீர் திறந்துவிடும் அளவிற்கு அணைகளில் இருப்பு உள்ளது. அவசரத் தேவைக்காக தெலுங்கானா மாநிலத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவோம்,” என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

தெலுங்கானாவிலும் கர்நாடகாவிலும் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்