தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா - பூட்டான் இடையே ரயில் போக்குவரத்து ஒப்பந்தம்

1 mins read
aaba9f52-f4d8-4ce4-96db-e3b08e5234d2
பூட்டான் மன்னருடன் பிரதமர் மோடி. - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: டெல்லியிலிருந்து வெள்ளிக்கிழமை காலை பிரதமா் மோடி தனி விமானத்தில் பூட்டான் சென்றார். விமான நிலையத்துக்கு நேரில் வந்திருந்த அந்நாட்டுப் பிரதமா் ஷெரிங் டோப்கே, பிரதமா் மோடியை ஆரத்தழுவி வரவேற்றாா்.

பரோ விமான நிலையத்திலிருந்து திம்பு நகா் வரையில் 45 கி.மீ. தொலைவுக்கு சாலையின் இருபுறமும் காத்திருந்த மக்கள், இருநாட்டுக் கொடிகளை அசைத்து மோடியை வரவேற்றனா்.

பூட்டான் பிரதமருடன் ஒன்றாக இணைந்து மதிய உணவருந்திய போது இருதரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து இருவரும் விவாதித்தனா். அதையடுத்து, எரிசக்தி, மின்னிலக்கம், விண்வெளி, வேளாண்மை, இளைஞா் நலன் மற்றும் பிற துறைகளில் பல்வேறு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் இருநாட்டு பிரதமா்கள் முன்னிலையில் கையொப்பமாகின.

குறிப்பாக, இந்தியா-பூட்டான் இடையே கோக்ராஜ்ஹா்-கெலேபு, பனாா்ஹட்-சம்ட்சே ஆகிய வழித்தடங்களில் ரயில் போக்குவரத்து ஏற்படுத்துவது குறித்து புரிந்துணா்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

பூட்டான் நாட்டின் உயரிய விருதாக கருதப்படும் ‘ஆா்டா் ஆஃப் ட்ரூக் கியால்பூ’ விருது, இந்தியா-பூட்டான் வளா்ச்சியில் ஆற்றிய அளவற்ற பங்கை அங்கீகரிக்கும் விதமாக பிரதமா் மோடிக்கு வழங்கப்படும் என 2021ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு முதல்முறை பூட்டான் சென்ற மோடிக்கு அந்த விருதை பூட்டான் மன்னர் ஜிக்மே கேசா் நம்கியால் வாங்சுக் வழங்கினார்.

குறிப்புச் சொற்கள்