காவலர்கள் என்னை மோசமாக நடத்தினர்: கெஜ்ரிவால்

1 mins read
2607bd4c-183f-4c8c-b65e-87d765b56c64
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 28ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மார்ச் 21ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்ட கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை தலைமையகத்துக்கு அழைத்துச் சென்று அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து ரௌஸ் அவென்யூ நீதிமன்ற வளாகத்தில் பணப்பரிவர்த்தனை மோசடி வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி முன்பு வெள்ளிக்கிழமை மாலை அவரை முன்னிலைப்படுத்தினர்.

அப்போது கெஜ்ரிவால் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

தம்மைக் காவலர்கள் தவறாக நடத்தியதாகவும் இது முதல்முறை நடந்ததது அல்ல; ஏற்கெனவே, துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை கைது செய்தபோதும் காவலர்கள் அவரை மோசமாக நடத்தினர் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து, சிசிடிவி கண்காணிப்பின் கீழ்தான் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் புகார்கள் எழுந்தால் விசாரணை நடத்த வசதியாக அந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்