பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வெங்காய ஏற்றுமதிக்கு காலவரையற்ற தடை

மும்பை: இந்தியா அதன் வெங்காய ஏற்றுமதிக்கு காலவரையற்ற தடை விதித்துள்ளது. பொதுத் தேர்தலுக்கு முன் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த நடவடிக்கையால், வெளிநாட்டுச் சந்தைகளில் வெங்காயத்தின் விலை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

உலகின் ஆகப் பெரிய வெங்காய ஏற்றுமதியாளரான இந்தியா, 2023 டிசம்பரில் ஏற்றுமதிக்குத் தடை விதித்தது. அந்தத் தடை மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது.

ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதில் இருந்து உள்ளூர் விலைகள் பாதியாக குறைந்துள்ளதாலும் புதிய வெங்காய விளைச்சல் வரும் என்பதாலும் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என வர்த்தகர்கள் எதிர்பார்த்தனர். இருப்பினும், வெங்காய ஏற்றுமதித் தடை அடுத்த அறிவிப்பு வரும் வரை நீடிக்கும் என இந்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.

“வெங்காயத்தின் புதிய விளைச்சல் நன்றாக இருக்கும் என்பதாலும் ஏற்கெனவே விலைகள் குறைந்து வருவதாலும் இந்த ஏற்றுமதித் தடை வியப்பை அளிக்கிறது. மேலும் இது தேவையற்றது,” என்று மும்பையைத் தளமாகக் கொண்ட ஏற்றுமதி நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் இந்திய பொதுத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் பொறுப்பைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார் திரு நரேந்திர மோடி.

பங்ளாதேஷ், மலேசியா, நேப்பாளம், ஐக்கிய அரபு சிற்றரசுகள் போன்ற நாடுகள் தங்கள் உள்ளூர் தேவையைப் பூர்த்தி செய்ய இந்தியாவின் வெங்காய இறக்குமதியை நம்பியுள்ளன. இந்தியாவின் வெங்காய ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளின் காரணமாக அதிகரித்துள்ள விலைகளின் தாக்கத்தால் அவை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

“இந்தியாவின் இந்தத் தடை நீட்டிப்பால், போட்டி போடும் இதர வெங்காய ஏற்றுமதி நாடுகள் தங்கள் விலையை அதிக அளவில் உயர்த்த வழி வகுத்துள்ளது. வேறு வழியின்றி நாடுகள் அவற்றின் வெங்காய இறக்குமதியை நாட வேண்டியிருக்கும்,” என்றார் மும்பையின் ஏற்றுமதி நிறுவனத்தின் மற்றொரு நிர்வாகி.

வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியாவின் போட்டியாளர்களாக விளங்கும் சீனா, எகிப்து ஆகியவற்றைவிட இந்தியா தனது இறக்குமதிக்குக் குறைந்த காலம் எடுத்துக்கொள்கிறது. ஆசிய நாடுகளின் வெங்காயத் தேவையின் பாதிக்கு மேற்பட்ட அளவை இந்தியா பூர்த்தி செய்கிறது.

2023, மார்ச் 31ஆம் தேதி முடியும் நிதியாண்டில் இந்தியா சாதனை அளவாக 2.5 மில்லியன் மெட்ரிக் டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, வெங்காயத்தின் விளைச்சல் நன்றாக இருப்பதால் மார்ச் 31ஆம் தேதியுடன் வெங்காய ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை இந்திய அரசாங்கம் நீக்க வேண்டும் என்று வெங்காய விவசாயிகள் சில நாள்களுக்கு முன் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த ஆண்டு டிசம்பரில் வெங்காய ஏற்றுமதித் தடை அமலானபோது, வெங்காயம் கிலோவுக்கு ரூ.60 என விற்கப்பட்டது. கடந்த வாரம் அது கிலோவுக்கு ரூ.30 ஆக இறங்கியது என்று மகராஷ்டிரா பயனீட்டாளர் விவகாரப் பிரிவு தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!