கைப்பேசியை ‘சார்ஜ்’ செய்தபோது தீப்பிடித்ததில் நான்கு சிறுவர்கள் பலி

கைப்பேசியை ‘சார்ஜ்’ செய்தபோது தீப்பிடித்ததில் நான்கு சிறுவர்கள் பலி

1 mins read
5c6642ad-08c8-4b53-a1d9-ed81bdb69186
கைப்பேசி. - படம்: பிக்சாபே

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் கைப்பேசியை ‘சார்ஜ்’ செய்தபோது எதிர்பாராதவிதமாக தீப்பிடித்ததில் நான்கு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், பல்லவபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கைப்பேசியை ‘சார்ஜ்’ செய்து கொண்டிருந்தபோது தீப்பிடித்தது. இந்தத் தீ அருகில் உள்ள படுக்கை விரிப்பிலும் பரவியதை அடுத்து நான்கு சிறுவர்கள் உயிரிழந்தனர். அவர்களது வயது விவரம் தெரியவரவில்லை.

அவர்களது பெற்றோர் ஜானி (41), பபிதா (37) ஆகியோர் காயமடைந்த நிலையில், அவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜானி அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் ஆனால், பபிதாவின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். கைப்பேசியை சார்ஜ் செய்யும்போது தீவிபத்து ஏற்பட்டதாக காவல்துறையினரிடம் ஜானி தெரிவித்தார்.

இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்