ஆக அதிக பெரும்செல்வந்தர்கள்: பெய்ஜிங்கைப் பின்னுக்குத் தள்ளிய மும்பை

1 mins read
984270a2-01c5-47ab-aff7-266b039f326c
மும்பையில் 92 பெரும்செல்வந்தர்கள் உள்ளனர். - படம்: ஏஎஃப்பி

மும்பை: ஆசிய நகரங்களிலேயே இந்தியாவின் மும்பை நகரில் முதல்முறையாக ஆக அதிகமான பெரும்செல்வந்தர்கள் உள்ளனர்.

இதற்கு முன்பு சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் ஆக அதிகமான பெரும்செல்வந்தர்கள் இருந்தனர்.

தற்போது பெய்ஜிங்கைப் பின்னுக்குத் தள்ளி மும்பை முதலிடம் வகிக்கிறது.

மும்பையில் 92 பெரும்செல்வந்தர்கள் இருப்பதாகவும் பெய்ஜிங்கில் 91 பெரும்செல்வந்தர்கள் இருப்பதாகவும் இவ்வாண்டுக்கான ஹுருன் ரிசர்ச் குளோபல் ரிச் பட்டியல் காட்டுகிறது.

இருப்பினும், இந்தியாவில் 271 பெரும்செல்வந்தர்கள் மட்டுமே இருப்பதாகவும் சீனாவில் அதைவிட அதிகமாக 814 பெரும்செல்வந்தர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

உலகளாவிய நிலையில் ஆக அதிக பெரும்செல்வந்தர்கள் உள்ள நகரப் பட்டியலில் மும்பை மூன்றாவது இடத்தில் உள்ளது.

119 பெரும்செல்வந்தர்களுடன் நியூயார்க் நகரம் முதலிடத்திலும் 97 பெரும்செல்வந்தர்களுடன் லண்டன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

குறிப்புச் சொற்கள்