கேரளாவில் அதிகமான இளம் வாக்காளர்கள்

கேரளாவில் அதிகமான இளம் வாக்காளர்கள்

1 mins read
5f9cb63b-c2de-4cf8-936d-c597f367a8c6
இந்தியாவிலேயே கேரளாவில்தான் அதிகமான இளம் வாக்காளர்கள் பதிவு செய்துள்ளனர். - படம் இணையம்

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த மூன்று மாதங்களில் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்த இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை 3.11 லட்சம் அதிகரித்து உள்ளது. சராசரி அடிப்படையில் இது இந்தியாவிலேயே அதிகம். இவர்கள் அனைவரும் முதன்முதலாக வாக்களிக்க உள்ளனர்.

கேரளாவில் புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணிகளில் மாநில தேர்தல் ஆணையத்தின் முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைத்து உள்ளதாக கேரள மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சஞ்சய் கவுல் கூறினார்.

2023 அக்டோபர் 27ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 18 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 77,176 ஆக இருந்தது. செவ்வாய்க்கிழமைவரை உள்ள கணக்கின்படி இளம் வாக்காளர் எண்ணிக்கை 3,88,981 ஆக உயர்ந்து உள்ளது.

குறிப்புச் சொற்கள்