கிறிஸ்தவர்கள் அதிகளவு வாழும் மணிப்பூரில் ஈஸ்டர் ஞாயிறு அரசு வேலை நாளாக அறிவிப்பு

கிறிஸ்தவர்கள் அதிகளவு வாழும் மணிப்பூரில் ஈஸ்டர் ஞாயிறு அரசு வேலை நாளாக அறிவிப்பு

1 mins read
dabc666d-c642-4420-955c-636bb24c0b39
இந்தியாவில் அதிகளவில் கிறிஸ்தவர்கள் வாழும் மாநிலமான மணிப்பூரில் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. - படம்: இந்திய ஊடகம்

மணிப்பூர்: உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடும் ஈஸ்டர் ஞாயிறு மார்ச் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் வரும் ஈஸ்டர் ஞாயிறு அரசு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதியாண்டு முடிய உள்ளதால் 30, 31 (சனி, ஞாயிறு) இரு நாள்களும் அரசு வேலை நாள் என மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் அதிகளவில் கிறிஸ்தவர்கள் வாழும் மாநிலமான மணிப்பூரில் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில அரசின் இந்த உத்தரவு கிறிஸ்தவ மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவதாக அம்மாநிலத்தின் பழங்குடியின அமைப்பு தெரிவித்துள்ளது.

உடனடியாக இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று நாகா மாணவர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மணிப்பூர் மாநிலத்தில் 28 லட்சம் கிறிஸ்தவர்கள் உள்ளனர். இது அம்மாநில மக்கள் தொகையில் 40% என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்