கெஜ்ரிவாலை நீக்கக் கோரிய மனு தள்ளுபடி

கெஜ்ரிவாலை நீக்கக் கோரிய மனு தள்ளுபடி

1 mins read
e34ef54a-7fe8-40bf-a086-de79e3f3d457
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்கக் கோரிய மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் இம்மாதம் 21ஆம் தேதி கைது செய்தனர்.

அவரை மார்ச் 28ஆம் தேதி (இன்று) வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

முதல்வர் பதவியில் இருந்து விலகப்போவதில்லை என்றும் சிறையில் இருந்தவாறே அரசை நடத்துவேன் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கெஜ்ரிவாலை முதல்வர் பதவியிலிருந்து நீக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. எடுத்த எடுப்பிலேயே மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

“இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எவ்வாறு தலையிட முடியும்?, பதவியில் இருந்து நீக்குவது குறித்து ஆளுநர் அல்லது அதிபர்தானே முடிவு செய்ய முடியும்?” என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

குறிப்புச் சொற்கள்