இந்தியப் பொருளியல் 8% நிலையான வளர்ச்சி: ஐஎம்எஃப் கணிப்பு

இந்தியப் பொருளியல் 8% நிலையான வளர்ச்சி: ஐஎம்எஃப் கணிப்பு

1 mins read
3dfad152-cc5f-4928-8507-8b3fa6c70abd
உள்நாட்டுப் பொருளியல் மீது இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என்கிறது ஐஎம்எஃப். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்தியப் பொருளியல் வரும் 2047ஆம் ஆண்டு வரை 8 விழுக்காடு வளா்ச்சி அடைய முடியும் என்று அனைத்துலக பண நிதியத்தின் (ஐஎம்எஃப்) இந்திய நிா்வாக இயக்குநா் கிருஷ்ணமூா்த்தி வேங்கடசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

டெல்லியில் நடைபெற்ற ஆங்கில ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவா் கூறுகையில், “8 விழுக்காடு பொருளியல் வளா்ச்சி என்பது கடினமானது. ஏனெனில் இதற்கு முன்பு இந்திய பொருளாதாரம் 8 விழுக்காடு அளவில் நிலையாக வளா்ந்ததில்லை.

“எனினும் அந்த வளா்ச்சி சாத்தியமே.

“கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள வளா்ச்சியுடன், அந்தக் காலகட்டத்தில் அமல்படுத்தப்பட்ட நல்ல கொள்கைளை இரட்டிப்பாக்கி சீா்திருத்தங்களை துரிதப்படுத்தினால், 2047ஆம் ஆண்டு வரை இந்தியப் பொருளியல் 8 விழுக்காடு வளா்ச்சி காணமுடியும்.

“இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உள்நாட்டு நுகா்வின் பங்கு சுமாா் 58 விழுக்காடு. எனவே உள்நாட்டுப் பொருளியல் மீது இந்தியா கவனம் செலுத்த வேண்டும்.

“போதிய அளவு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடிந்தால், அது அதிக நுகா்வுக்கு வழிவகுக்கும்.

“வேலைவாய்ப்புகளை உருவாக்க உற்பத்தித் துறையை ஊக்குவிக்க வேண்டியது அவசியம். இதேபோல நிலம், தொழிலாளா், மூலதனம், வங்கி உள்ளிட்ட துறைகளில் சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்,” என்றாா் கிருஷ்ணமூா்த்தி வேங்கடசுப்பிரமணியன்.

குறிப்புச் சொற்கள்