தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிறந்தநாள் கேக் சாப்பிட்டு உயிரிழந்த சிறுமி

1 mins read
85b7799a-a96e-4c7e-bc98-02397dbd90ad
கேக்குடன் மான்வி சிறுமி. - படம்: இந்திய ஊடகம்
multi-img1 of 2

சண்டிகர்: பிறந்தநாள் கேக் சாப்பிட்டு வாந்தியெடுத்த 10 வயது சிறுமி மான்வி உயிரிழந்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா பகுதியில் மார்ச் 24ஆம் தேதி மான்வி தனது 10வது பிறந்த நாளைக் கொண்டாடினர்.

பிறந்தநாள் கேக்கை குடும்பத்தினர் இணையம் மூலம் ஆர்டர் செய்து வாங்கியுள்ளனர்.

இரவு 7 மணி அளவில் கேக் வெட்டி, அனைவரும் சாப்பிட்டுள்ளனர். இரவு 10 மணி அளவில் எல்லாருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டு வாந்தி எடுத்தனர் என்று மான்வியின் தாத்தா ஹர்பன் லால் கூறினார்.

மான்விக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டு தொண்டை வறண்டு இருப்பதாகக் கூறியதாகவும், பின்னர் அவர் படுத்துத் தூங்கியதாகவும் திரு ஹர்பன் லால் கூறினார்.

காலையில் மான்வியின் உடல்நிலை மோசமானதால், குடும்பத்தினர் உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்தனர், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். குடும்பத்தினர் உடல்நிலை தேறி வருவதாகக் கூறப்பட்டது.

கேக் கெட்டு போனதாலும், அதை சாப்பிட்டதே மான்வி உயிரிழப்புக்கு காரணம் என அவரது குடும்பத்தினர் காவல்துறையில் புகார் செய்தனர்.

காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பேக்கரியில் இருந்து கேக்கின் மாதிரிகளை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். அதன் முடிவு விபரம் வந்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்