தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மரத்திலிருந்து தண்ணீர், ஆந்திராவில் அதிசயம்

1 mins read
0726eaff-4927-4354-9a2a-0d36542890ac
மரத்திலிருந்து பீச்சியடிக்கும் தண்ணீர். - படம்: இணையம்

திருப்பதி: ஆந்திராவிலுள்ள வனப்பகுதியிலுள்ள ஒரு மரத்திலிருந்து தண்ணீர் கொட்டிய சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாகியுள்ளது.

ஆந்திராவில், கல்லூரி சீதாராம ராஜ் மாவட்டம் இந்துகூர் மலைத்தொடர் பகுதியிலுள்ள சிந்து ஊர் என்ற இடத்தில் இது நடந்துள்ளது.

ரம்ப சோடவரம் மாவட்ட வன அலுவலர் நரேந்திரனும் வனத்துறையினரும் மார்ச் 30ஆம் தேதி (சனிக்கிழமை) காவல்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கறுப்பு நிறத்தில் இருந்த ஒரு மரத்தில் பெரிய குமிழி போல் இருந்ததை வன அலுவலர் நரேந்திரன் கண்டார். அவர் தனது ஊழியர்களிடம் அந்த இடத்தில் வெட்டமாறு கூறினார்.

ஊழியர் அதை வெட்டிய போது மரத்திலிருந்து ஓடை போல் தண்ணீர் கொட்டியது.

அந்த மரத்தில் தண்ணீர் சேமிக்கும் அமைப்பு உள்ளது.

இந்த மரம் குறித்து கோண்டா ரெட்டி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் வனத்துறையினருக்குக் கூறினர்.

மரம் தனது தேவைக்கு ஏற்ப கோடை காலத்துக்காக தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ளும் என்றும் முதலைத் தோலை போல் மரத்தின் பட்டை உள்ளதால் இதற்கு முதலை மர பட்டை எனவும், அறிவியல் பெயர் டெர்மி னாலியா டோமென்டோசா எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

தண்ணீரை சுவைத்துப் பார்த்து இந்த தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றது அல்ல என திரு நரேந்திரன் கூறினார்

இந்த மரத்தின் தடித்த, உறுதியான மரத்துக்காக இது வெட்டப்பட்டு வருவதால் இம்மரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு இம்மரம் இருக்கும் வனப்பகுதிகளை இந்திய வனத்துறையினர் வெளியிடுவதில்லை.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்