அருணாசல பிரதேச சட்டமன்றத் தோ்தலில் முதல்வா் பெமா காண்டு உள்பட 10 பாஜக வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வாகியுள்ளனா்.
பாஜக ஆளும் அருணாசல பிரதேசத்தில் மொத்தம் 60 சட்டமன்றத் தொகுதிகளும், 2 நாடாளுமன்றத் தொகுதிகளும் உள்ளன. இம்மாநிலத்தில் நாடாளுமன்றத் தோ்தலுடன் சட்ட மன்றத்துக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல்19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இத்தோ்தல்களில் வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் சனிக்கிழமை (மாா்ச் 30) நிறைவடைந்தது.
பெமா காண்டு உள்பட 6 பாஜக வேட்பாளா்கள் களமிறங்கிய தொகுதிகளில் அவா்களைத் தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. 4 தொகுதிகளில் எதிா்க்கட்சி வேட்பாளா்கள் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றுவிட்டனா்.
அருணாசல பிரதேச சட்டமன்றத் தோ்தலில் ஜூன் 2ஆம் தேதியும், நாடாளுமன்றத் தோ்தலில் ஜூன் 4ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

