தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜெகன்மோகன் ரெட்டி வாகனம் மீது செருப்பு வீச்சு

1 mins read
febe5ecb-71e7-490c-907d-37f4559a1ea7
ஆந்திராவில் சட்டமன்றம், நாடாளுமன்றங்களுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுவதால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம், பா.ஜ.க., ஜனசேனா காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். - படம்: இந்திய ஊடகம்

திருப்பதி: ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர மாநிலம் அனந்தபூர் அடுத்த குட்டி பஸ் நிலையத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து பறந்து வந்த செருப்பு ஜெகன்மோகன் ரெட்டியை தாண்டி சென்று விழுந்தது.

இது குறித்து காவல்துறையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திராவில் நாடளுமன்றம், சட்டமன்றத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் பிரசாரங்கள் நாளுக்கு நாள் பரபரப்பாகி வருகின்றன.

குறிப்புச் சொற்கள்