தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிக் கொன்றவன் மீது குற்றச்சாட்டு

1 mins read
426f9ef4-1aca-4ac4-a1a7-d684f55b0b8e
கைகள் கட்டப்பட்ட நிலையில் சிறுவனின் உடல் குளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. - படம்: பிக்சாபே

மும்பை: குளம் ஒன்றில் 12 வயது சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, கட்டுமான வேலை செய்யும் இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நவி மும்பையில் உள்ள தலோஜா அருகே கிராமத்து குளத்தில், தலையில் பலத்த காயத்தோடு கைகள் கட்டப்பட்ட நிலையில் சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

சிறுவன் விளையாடுவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றதாகவும் மார்ச் 25ஆம் தேதி முதல் சிறுவனைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்ட இருவரில் ஒருவன், சிறுவனைக் கடத்தி இயற்கைக்கு மாறான முறையில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது.

சிறுவன் ஒத்துழைக்காததால் கல்லைக் கொண்டு தலையில் ஓங்கி அடித்துக் கொன்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

கொன்றவனின் சகோதரன் சடலத்தை அப்புறப்படுத்த உதவியதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையடுத்து, 20 வயது ரம்ஸான் முகம்மது குடுஸ் ஷேக், 30 வயது அஸாட் முகம்மது குடுஸ் ஷேக் ஆகிய இருவர் மீதும் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

துணியைக் கொண்டு சிறுவனின் கழுத்தை நெரித்தும் உள்ளனர் என்று நம்பப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்