ஐந்து மாநிலங்களில் பல உயர் அதிகாரிகள் இடமாற்றம்

ஐந்து மாநிலங்களில் பல உயர் அதிகாரிகள் இடமாற்றம்

இந்திய ஊடகம்

03 Apr 2024 - 6:02 pm

1 mins read

புதுடெல்லி: இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் தேர்தல் ஆணைய மறுஆய்வு கூட்டம் நடைபெற்றது.

அதில் தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், சுக்பீர்சிங் சந்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பு அதிகாரிகளின் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த 8 மாவட்ட ஆட்சியர்கள் 12 காவல் கண்காணிப்பு அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்த அறிவிப்பு வெளியானது. அவர்கள் தங்களது இளைய அதிகாரியிடம் உடனடியாக பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மாற்றப்பட்டவர்களுக்குப் பதிலாக புதியவர்களை நியமிக்க, ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பட்டியலை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பவும் அந்தந்த மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்