தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்திய செல்வந்தர் பட்டியலில் அம்பானி முதலிடம்

1 mins read
c0a09030-b1d6-4126-af7c-84c832ce1c97
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி. - படம்: இந்திய ஊடகம்

மும்பை: 2024-ஆம் ஆண்டின் 200 இந்திய செல்வந்தர்கள் பட்டியலை போர்ப்ஸ் சஞ்சிகை வெளியிட்டுள்ளது. இதில் முகேஷ் அம்பானி முதலிடமும், கெளதம் அதானி இரண்டாம் இடமும் பிடித்துள்ளனர்.

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானிக்கு சொத்து மதிப்பு 116 பில்லியன் அமெரிக்க டாலர். உலக அளவில் அவர் 9ஆவது இடத்தில் உள்ளார்.

இரண்டாம் இடத்தில் அதானி (84 பி), மூன்றாம் இடத்தில் ஷிவ் நாடார் (36.9 பி) உள்ளார்கள்.

போர்ப்ஸ் ஆண்டுதோறும் அதிக சொத்து மதிப்பு கொண்ட இந்திய செல்வந்தர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் சுமார் 200 பேர் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு வெளியான பட்டியலில் 169 பேர் இடம்பெற்றிருந்தனர்.

குறிப்புச் சொற்கள்