தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வயநாட்டில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்

1 mins read
c408f782-1fcb-42ac-b3cf-54a55fbb2bb8
வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவை ராகுல் காந்தி தாக்கல் செய்தார். - படம்: இந்திய ஊடகம்

கொச்சி: வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமையன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

2019 மக்களவைத் தேர்தலில் நான்கு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார்.

புதன்கிழமை காலை கேரளம் சென்ற ராகுல் காந்தி, ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் சாலையில் ஒரு மணிநேரம் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடைந்தார்.

அதன்பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவை ராகுல் காந்தி தாக்கல் செய்தார். அவருடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர்.

கேரளத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

குறிப்புச் சொற்கள்