என்சிஇஆர்டி நூல்களில் பாபர் மசூதி இடிப்பு தகவல் நீக்கம்

1 mins read
d3fb6fd9-2176-4643-ab41-273cd1a12fce
புதிய மாற்றங்களுடன் 2024-2025 கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ பாடநூல்கள் தயாராகி வருகின்றன.  - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: புதிய மாற்றங்களுடன் 2024-2025 கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ பாடநூல்கள் தயாராகி வருகின்றன.

மத்திய அரசின் தேசியக் கல்வி ஆராய்ச்சி பயிற்சி மன்றத்தின் (என்சிஇஆர்டி) நூல்களில் பாபர் மசூதி இடிப்பு உள்ளிட்ட பல குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளன.

புதிதாக மாற்றியமைக்கட்ட தகவல்கள், பிளஸ் 2 சிபிஎஸ்இ பாடங்களில் நடப்பு ஆண்டு முதல் சேர்க்கப்பட்டுள்ளன.

உத்தரப் பிரதேசம் அயோத்தியிலிருந்த பாபர் மசூதி டிசம்பர் 6, 1992ஆம் ஆண்டில் இடிக்கப்பட்டது. இந்த இடத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ராமர் கோயில் திறக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்டமான முறையில் இக்கோயில் இன்னும் கட்டப்பட்டு வருகிறது. இதில் மசூதி இடிப்பு குறித்த வரலாற்று குறிப்புகள் பிளஸ் 2 வகுப்புக்கான அரசியல் அறிவியல் பாடப்பிரிவின் நூல்களில் இடம்பெற்றிருந்தன.

பாபர் மசூதி-ராமர் கோயில் பிரச்சினைகள் நான்கு பக்கப் பாடங்களாகக் கற்பிக்கப்பட்டு வந்தன. தற்போது மசூதி இடிப்பின் குறிப்புகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.

இந்தத் தகவல்கள் என்சிஇஆர்டியின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்