புதுடெல்லி: அலங்காரம், வாழ்த்துப் பாடல் எனப் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான அனைத்தும் இந்தப் பிறந்தநாள் விழாவில் இருந்தன.
முக்கியமான ஒன்றைத் தவிர.
இன்ஸ்டகிராம் தளத்தில் வலம்வரும் காணொளியில், ஓர் இளைஞர் கேக் பதிலாக தன் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பெரிய பப்பாளிப்பழத்தை வெட்டினார்.
பிறந்தநாளுக்கு கேக் வெட்டுவதைச் சிலர் விரும்பமாட்டார்கள். வேறு சிலர், புதுமையாக எதையாவது தங்களது பிறந்தநாளுக்குச் செய்து பார்ப்பார்கள்.
இந்த இளைஞர் வித்தியாசமான முயற்சியில் இறங்கி இருக்கிறாரே என்று வியந்தனர் இணையவாசிகள்.
இருப்பினும், வருடத்தில் ஒரு நாள்தான் கேக் வெட்ட முடியும், அதையும் ஏன் இந்த இளைஞர் வேண்டாம் என்கிறார் என்று கேள்வி எழுப்பினர் சிலர்.
“இதற்கு வெட்டாமலே இருக்கலாம்,” என்று கேலி செய்தார் ஓர் இணையவாசி.
இதுவரை நான்கு மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது இந்தக் காணொளி.