வருணுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாததில் வருத்தமில்லை: மேனகா காந்தி

வருணுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாததில் வருத்தமில்லை: மேனகா காந்தி

1 mins read
6efbfa53-7e80-4225-9fd5-3fe8c14998a3
வருணுடன் மேனகா காந்தி. - படம்: இந்திய ஊடகம்

லக்னோ: முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கு அவர் எம்.பி.யாக உள்ள உ.பி.யில் சுல்தான்பூரில் போட்டியிட பாஜக மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளது. ஆனால் அவரது மகனும் பிலிபித் தொகுதி எம்.பி.யுமான வருண் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கவில்லை. பிலிபித் தொகுதியில் அவருக்குப் பதிலாக உ.பி. அமைச்சர் ஜிதின் பிரசாத் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மேனகா காந்திகூறும்போது, “வருண் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாததில் ஆச்சரியமோ வருத்தமோ இல்லை. பாஜக, ஒரு தொண்டர் அடிப்படையிலான கட்சி, அனைவரும் எடுக்கப்பட்ட முடிவுகளை கடைப்பிடிக்கின்றனர்,” என்றார்.

மேலும் வருண் வேறு கட்சியில் சேர்கிறாரா என்பது குறித்தும் அவரது எதிர்கால திட்டங்கள் குறித்தும் தனக்கு எதுவும் தெரியாது என்றார் மேனகா.

குறிப்புச் சொற்கள்