காதலியைக் கொன்றதாகக் கூறப்படுபவர் 1,400 கி.மீ. தூரம் துரத்திப் பிடிபட்டார்

புதுடெல்லி: தம்முடன் வாழ்ந்த காதலியைக் கொன்று உடலை அலமாரிக்குள் திணித்த 27 வயது ஆடவர், ஆம்புலன்ஸ் மூலம் தப்பிக்க முயன்றபோது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரிலில் கைது செய்யப்பட்டார்.

டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களில் 48 மணி நேரம், 1400 கி.மீ. துரத்திய பின்னரே சந்தேக ஆடவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர் குஜராத்தின் சூரத் நகரில் வசிக்கும் விபுல் டெய்லர் என்றும் அவர் முன்பு கொலை முயற்சி உள்ளிட்ட 10 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி என்றும் அந்த அதிகாரி கூறினார்.

ஏப்ரல் 3ஆம் தேதி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக டாப்ரி காவல் நிலையத்தில் இரவு 10.40 மணிக்கு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறைக் குழு ஒன்று சம்பவ இடத்துக்கு விரைந்தது.

சம்பவ இடத்தை அடைந்ததும், ருக்‌ஷார் என்ற அந்தப் பெண்ணின் தந்தை முஸ்தக்கீன், காவல்துறைக் குழுவைச் சந்தித்து, விபுல் டெய்லர் தம் மகளைக் கொன்றதாக அதிகாரிகளிடம் கூறினார்.

மேலும், தம் மகள் கடந்த ஒன்றரை மாதங்களாக காதலன் விபுல் டெய்லருடன் இந்த வீட்டில் வசித்து வந்ததாகக் காவல்துறையிடம் அவர் சொன்னார்.

விபுல் தமது காரில் இரவு 9 மணியளவில் வளாகத்தை விட்டு வெளியேறினார் என்று கண்காணிப்புக் கருவி காட்சிகள் மூலம் விசாரணையில் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, அந்த காரைப் பின்தொடர ஒரு காவல்துறைக் குழு அனுப்பப்பட்டது.

“டெல்லியிலிருந்து ராஜஸ்தானின் உதய்ப்பூருக்கு விபுலின் காரை அந்தக் குழு பின்தொடர்ந்தது. வழித்தடங்களை மாற்றுவதன் மூலம் தவறாக வழிநடத்த விபுல் முயன்றும், விபுல் விபத்தில் சிக்கும் வரை 48 மணி நேரமாக காவல்துறைக் குழு உறுதியுடன் செயல்பட்டது. விபத்தில் விபுலுக்குக் காயங்கள் ஏற்பட்டன,” என்று காவல்துறைத் துணை ஆணையர் அங்கிட் சிங் தெரிவித்தார்.

இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் விபுல் பில்வாராவுக்கு கொண்டுசெல்லப்பட்டது தெரியவந்தது.

“மருத்துவமனையை அடைந்ததும் சிகிச்சை பெறுவதற்குப் பதிலாக குஜராத்தின் சூரத் நகருக்குச் செல்லும் மற்றொரு தனியார் ஆம்புலன்சில் அவர் ஏறினார் என்பது மேலும் தெரியவந்தது,” என்று திரு சிங் கூறினார்.

ஏறக்குறைய 1,400 கி.மீ. தூரம் துரத்தியதற்குப் பின்னர் காயமுற்ற நிலையில் இருந்த விபுலை காவல்துறையினர் கைது செய்ததாகவும் திரு சிங் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!