கெஜ்ரிவாலின் பிணை மனு தள்ளுபடி

கெஜ்ரிவாலின் பிணை மனு தள்ளுபடி

1 mins read
7947575b-c561-4636-9cdd-d0c15ef875f1
அரவிந்த் கெஜ்ரிவால். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தான் கைது செய்யப்பட்டதை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடந்தார். முதலமைச்சர் என்பதற்காக எந்தச் சலுகையும் காட்ட முடியாது எனக் கூறி நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.

அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்கள் மூலம் கெஜ்ரிவால் சதி செய்தது உறுதியாகி இருக்கிறது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்