தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கனடா தேர்தலில் இந்தியத் தலையீடு இல்லை

1 mins read
c3868957-71fa-4cb0-b29c-464e8112e9a2
கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இருவரும் 2023 செம்டம்பரில் புதுடெல்லியில் நடந்த ஜி20 மாநாட்டின்போது. - கோப்புப் படம்

புதுடில்லி: கனடாவில் நடந்த தேர்தலில் இந்தியாவின் தலையீடு இல்லை என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தேர்தலில் வெளிநாடுகளின் தலையீடு குறித்து விசாரித்த குழு, தேர்தல் ஆணைய அதிகாரிகள், அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்களிடம் விசாரணை மேற்கொண்டது.

எனினும், கனடாவின் கடந்த இரண்டு தேர்தல்களில் சீனா தலையிட்டதாக கனேடிய புலனாய்வு நிறுவனம் கண்டறிந்துள்ளது.

விசாரணைக் குழுவின் முன் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புதன்கிழமை சாட்சியமளிப்பார் எனக் கூறப்பட்டது.

2021ஆம் ஆண்டு தேர்தலில் காலிஸ்தான் இயக்கம், பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடுகளுக்கு அனுதாபம்கொண்ட, இந்திய வம்சாவளி வாக்காளர்களை அதிகம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்ட மாவட்டங்களை இந்திய அரசு குறிவைத்ததாகவும், தேர்தலில் இந்தியாவின் தலையீடு உள்ளது எனவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனை இந்தியா திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்தியா மீது கனடா குற்றம் சாட்டியதை அடுத்து, இருநாட்டு உறவு மோசமடைந்தது. கடந்த பிப்ரவரியில் ‘சீனா, ரஷ்யா உடன் இந்தியாவையும் வெளிநாட்டு அச்சுறுத்தல்’ என கனடா உளவுத்துறை குற்றம் சாட்டியதில் மேலும் விரிசல் ஏற்பட்டது.

குறிப்புச் சொற்கள்