தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதல் 10 பணக்கார வேட்பாளர்களில் ஐவர் தமிழ்நாட்டினர்

2 mins read
5122a62d-514e-47dc-9ee4-c4757efefd82
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பணக்கார வேட்பாளர் நகுல் நாத் (வலது) தந்தை கமல் நாத்துடன். - படம்: இந்திய ஊடகம்

புதுடில்லி: முதற்கட்ட நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்தின் மகன் நகுல் நாத் ரூ.717 கோடி ரூபாய் சொத்துகளுடன் பணக்கார வேட்பாளர் என்ற இடத்தை பிடித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்கு அதிக சொத்துகள் உள்ளது என்பது குறித்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆய்வு நடத்தியது.

தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டம் ஏப்ரல் 19ம் தேதி துவங்கி, ஏழாம் கட்டம் ஜூன் 1ம் தேதி முடிகிறது.

முதற்கட்டத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில், முதல் பத்து இடத்தில் உள்ள பணக்காரர்களில் ஐவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். விவரம்:

1. மத்தியப் பிரதேசம் சிந்த்வாரா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நகுல் நாத் - ரூ.716 கோடி.

2. ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக் குமார் - ரூ. 662 கோடி.

3. சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதன் - ரூ. 304 கோடி.

4. உத்தரகண்ட் , தெக்ரி கர்வால் தொகுதியின் பாஜக வேட்பாளர் மாலா ராஜ்ய லட்சுமி - ரூ.206 கோடி.

5. உத்தரப்பிரதேசம், சஹாரன்பூர் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மஜித் அலி - ரூ.159 கோடி.

6. வேலூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் - ரூ.152 கோடி.

7. தமிழகம், கிருஷ்ணகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் - ரூ.135 கோடி.

8. மேகலாயா, ஷில்லாங் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வின்சென்ட் எச் பாலா - ரூ.125 கோடி.

9. ராஜஸ்தான், நாகௌர் தொகுதி பாஜக வேட்பாளர் ஜோதி மிர்தா- ரூ102 கோடி

10. சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி- ரூ.96 கோடி.

குறிப்புச் சொற்கள்