அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன்: வீரப்ப மொய்லி

அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன்: வீரப்ப மொய்லி

1 mins read
4098ec8e-8d55-4d4e-9a45-3bb11d5bcb96
கர்நாடகா முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி. - படம்: இந்திய ஊடகம்

பெங்களூரு: கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான வீரப்ப மொய்லி தேர்தல் அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

2 வயதான வீரப்ப மொய்லி அம்மாநிலத்தின் முதல்வராக இருந்தவர். 6 முறை எம்.எல்.ஏ-வாக இருந்த வீரப்ப மொய்லி, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் அமைச்சராக இருந்திருக்கிறார்.

கடந்த 2009 மற்றும் 2014 நாடாளுமன்றத் தேர்தல்களில் சிக்கபள்ளாபூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.பியான வீரப்ப மொய்லி, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தார். இம்முறையும் அதே தொகுதியில் போட்டியிட அவர் விரும்பினார். ஆனால் அவருக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்க மறுத்துவிட்டது. இந்நிலையில், தேர்தல் அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாக புதன்கிழமை அறிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வீரப்ப மொய்லி, “எனக்கு சிக்கபள்ளாபூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்று எந்த வருத்தமும் இல்லை. கட்சி தலைமையின் முடிவுக்கு நான் எப்போதுமே கட்டுப்பட்டு நடப்பவன். என்னை ஒரு பதவி ஆசை பிடித்தவனாக மக்கள் மத்தியில் காட்ட நான் விரும்பவில்லை. நான் கட்சிக்காக தொடர்ந்து உழைப்பேன்,” எனக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்