ஹரியானாவில் பள்ளிப் பேருந்து விபத்து: ஆறு சிறுவர்கள் பலி, 14 பேர் காயம்

ஹரியானாவில் பள்ளிப் பேருந்து விபத்து: ஆறு சிறுவர்கள் பலி, 14 பேர் காயம்

1 mins read
20bd859c-8403-4312-bfa0-ec6b6e3a498d
ஹரியானாவில் உள்ள கிராமத்தில் நிகழ்ந்த பள்ளிப் பேருந்து விபத்தின் காரணமாக சிறுவர்கள் இறந்தது அப்பகுதி மக்களைத் துயரில் ஆழ்த்தியுள்ளது. - படம்: இந்திய ஊடகம்

மகேந்திரகர்: இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பள்ளிப் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் ஆறு சிறுவர்கள் மாண்டனர். ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி காலை நிகழ்ந்த இந்த விபத்தில் 14 பேர் காயமடைந்தனர்.

தனியார் பள்ளியை நோக்கி பள்ளிப் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்தது.

சம்பவ இடத்திலேயே ஐந்து சிறுவர்கள் மாண்டனர்.

இன்னொரு சிறுவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது வழியிலேயே உயிரிழந்தார்.

கிராமத்தை இணைக்கும் சிறிய, குறுகிய சாலையிலிருந்து பிரதான சாலைக்குள் பள்ளிப் பேருந்து திரும்பியபோது அதன் ஓட்டுநர் வேகத்தை குறைக்கவில்லை என்றும் அதன் காரணமாகப் பேருந்தின் கட்டுப்பாட்டை அவர் இழந்ததாகவும் சம்பவத்தை நேரில் கண்டோர் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்
ஹரியானாவிபத்து