தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாடாளுமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியில்லை என அறிவிப்பு

1 mins read
bbd3e1f5-bf40-4334-a8a8-020cc55a0de0
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு. - படம்: இந்திய ஊடகம்

ஐதராபாத்: ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் 175 சட்டமன்றத் தொகுதிகளும், 25 நாடாளுமன்றத் தொகுதிகளும் உள்ளன. இந்த ஆண்டு ஒரே சமயத்தில் நாடாளுமன்றத் தேர்தலும், சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளன.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனா கட்சி, பா.ஜ.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டது.

இந்த நிலையில், தெலுங்கானாவில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்துள்ளது. “நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்தாலும், தெலுங்கானாவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. தெலுங்கானாவில் நடக்கவிருக்கும் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து கட்சியின் தலைமை முடிவு செய்யும். வருகிற ஜூன் அல்லது ஜூலையில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் தெலுங்கு தேசம் கட்சி தனது அரசியல் பயணத்தை மீண்டும் தொடங்கும்,” என இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்