முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைக் கொன்றவரின் மகன் தேர்தலில் போட்டி

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைக் கொன்றவரின் மகன் தேர்தலில் போட்டி

1 mins read
d3f81d35-2158-4347-bdfa-c41663fe6380
சரப்ஜீத் சிங். - படம்: ஊடகம்

அமிர்தசரஸ்: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைக் கொன்றவரின் மகன் மக்களவைத் தோ்தலில் போட்டியிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியைப் படுகொலை செய்தவரின் மகன் பஞ்சாப் மாநிலம், ஃபரித்கோட் மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.

இந்திரா காந்தியை அவருடைய மெய்க்காவலா்களான பியாந்த் சிங், சத்வந்த் சிங் ஆகியோா் கடந்த 31-10-984ல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனா். இவர்களில் பியாந்த் சிங்கின் மகன் சரப்ஜீத் சிங், 45, ஃபரித்கோட் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறாா். இதுகுறித்து சரப்ஜீத் சிங் கூறுகையில், ‘”ஃபரித்கோட் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுமாறு இப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனா். இதனால், இத்தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறேன்,” என்றாா்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்