பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் ஈஸ்வரப்பா

பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் ஈஸ்வரப்பா

1 mins read
a4f3c81c-d1ac-4018-90ec-ff231ac9dbe3
 பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா. - படம்: இந்திய ஊடகம்

பெங்களூரு: பாஜக மேலிடம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததை அடுத்து கர்நாடக முன்னாள் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான ஈஸ்வரப்பா சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு ஷிமோகா தொகுதியிலும் தன் மகன் காந்தேஷுக்கு ஹாவேரி தொகுதியிலும் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்தார். ஆனால், பாஜக மேலிடம் வாய்ப்பு வழங்கவில்லை. ஷிமோகா தொகுதியில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவுக்கும், ஹாவேரியில் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கும் பாஜக வாய்ப்பு வழங்கியது.

இதனால் கோபமடைந்த ஈஸ்வரப்பா, ஷிமோகா தொகுதியில் சுயேச்சையாகக் களமிறங்குவதாக அறிவித்தார்.

குறிப்புச் சொற்கள்