இந்தியாவில் 23 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான மரங்கள் அழிப்பு: அனைத்துலக ஆய்வு அறிக்கையில் தகவல்

அஸ்ஸாம்: இந்தியாவில் கடந்த 24 ஆண்டுகளில் 23 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக அனைத்துலக வன கண்காணிப்பு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் பிற தரவுகள் மூலம் வனப் பரப்பு குறித்த தகவல்களை ‘அனைத்துலக வன கண்காணிப்பு அறிக்கை’ என்ற தலைப்பில் உலக வளங்கள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

அந்த அறிக்கையில், இந்தியாவில் கடந்த 2002-2023 வரையிலான காலகட்டத்தில் 4.14 லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட ஈரக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 24 ஆண்டுகளில் 23 லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் இடம்பெயா்வது, இயற்கைச் சீற்றம் உள்ளிட்டவை மர அழிப்புக்கு முக்கிய காரணங்களாக கூறப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியாவில் 2013-2023 வரை 95% வனங்கள் இயற்கைச் சீற்றங்களின் பாதிப்பால் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

உணவு, வேளாண் நிறுவனம் (எஃப்ஏஓ) வெளியிட்ட தரவுகளில், “கடந்த 2015 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் ஆண்டுதோறும் 6.68 லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் மர அழிப்பில் உலகளவில் இந்தியா இரண்டாமிடத்தை பிடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2001 முதல் 2022 வரை காட்டுத்தீயால் 35,900 ஹெக்டோ் பரப்பளவிலான மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

நாட்டிலேயே அதிகப்படியான மரங்கள் அழிக்கப்படும் மாநிலங்களில் அஸ்ஸாம் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் முறையே மிசோரம், அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூா் ஆகிய மாநிலங்கள் உள்ளன எனத் தெரிய வந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!