தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அசாமில் ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்கள்

1 mins read
f27caf89-ee97-4ec5-aa9b-336cb56144fd
படம்: - தினத்தந்தி

சோனித்பூர்: அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் புலோகுரி நேபாளி பாம் நகரில் ரான் பகதூர் தபா என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 350 வாக்காளர்கள் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

1997ஆம் ஆண்டு ரான் பகதூர் காலமானார். அவருக்கு ஐந்து மனைவிகள், 12 மகன்கள், ஒன்பது மகள்கள், 150 பேரக்குழந்தைகள் உள்ளனர்.

குடும்பத்தில் மொத்தம் 1,200 பேர் இருப்பதாகக் கூறப்பட்டது. இவர்களுள் 350 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக ரான் பகதூர் தபாவின் மகன் சர்கி பகதூர் தபா, 64 கூறினார்.

அசாமில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19, 26, மே 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

குறிப்புச் சொற்கள்