அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர்: இந்திய-அமெரிக்க போர் விமான இயந்திர ஒப்பந்தம் வரலாற்று நிகழ்வு

அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர்: இந்திய-அமெரிக்க போர் விமான இயந்திர ஒப்பந்தம் வரலாற்று நிகழ்வு

1 mins read
3096b074-7129-49f3-bcd5-17569660fc3a
அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் லோய்ட் ஆஸ்டின். - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: இந்திய ஆகாயப் படைக்கான போர் விமான இயந்திரங்களை இணைந்து தயாரிக்க வகைசெய்யும் ஒப்பந்தத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் கையெழுத்திட்டன.

அந்த ஒப்பந்தம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்று என அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் லோய்ட் ஆஸ்டின் புதன்கிழமையன்று (ஏப்ரல் 17) அரசியல் தலைவர்களிடம் கூறினார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சென்ற ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டபோது அந்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக அறிவிக்கப்பட்டது. இந்திய ஆகாயப் படைக்கான போர் விமான இயந்திரங்களை இணைந்து தயாரிக்க அமெரிக்காவின் ஜெனரல் இலெக்ட்ரிக் நிறுவனமும் இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனமும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

“இது இந்தியாவின் ஆற்றலைப் பெரிதும் மேம்படுத்தும். இதோடு, இந்தியாவுடன் இணைந்து நாங்கள் ராணுவ வாகனம் ஒன்றையும் தயாரிக்கிறோம்,” என்று திரு ஆஸ்டின் தெரிவித்தார்.

அமெரிக்கா, இந்தியாவுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளதாக திரு ஆஸ்டின் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்